2025 மே 16, வெள்ளிக்கிழமை

இம்ரானின் வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்

Ilango Bharathy   / 2023 மே 21 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத்  தகவல் கிடைத்ததையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு சோதனை நடத்தினர்.

அண்மையில், இம்ரான் கான் வீட்டில் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கும்படியும் அவரது கட்சிக்கு, பொலிஸார் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, லாகூரிலுள்ள இம்ரான் வீட்டில், அதிரடியாக உள்ளே நுழைந்து பொலிஸார் சோதனை நடத்தினர். வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க வாயில் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இம்ரான் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 6 பயங்கரவாதிகளை கைது செய்ததாக, லாகூர் காவல் துறை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .