2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இம்ரான்கானுக்கான போராட்டம் வாபஸ்

Freelancer   / 2024 நவம்பர் 28 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மீளபெறப்பட்டுள்ளது.

 இதனால், இம்ரான்கானை விடுதலை செய்ய வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள், செவ்வாய்க்கிழமை (25),  தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பரவுவதை தடுக்க இணையம் மற்றும் அலைபேசி சேவை துண்டிக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டன. பொலிஸார், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் இஸ்லாமாபாத்தில் வன்முறை நிலவியது. இதில் 10 பொலிஸார் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருந்தனர். 

3 நாட்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இம்ரான்கான் ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து, தலைநகர் இஸ்லமபாத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X