Freelancer / 2025 ஜூன் 11 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள இரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று, ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.
இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC), அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள இரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.
ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
22 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
3 hours ago