Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடனடியாக அமுக்கு வரும் வகையில், தனது இராஜினாமாவை அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா கையளித்துள்ளதாக, அல்ஜீரிய அரச ஊடகம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவின் இராஜினாமைவைத் தொடர்ந்து அந்நாட்டு வீதிகளில் கார்கள் ஒலியெழுப்பியதுடன், அந்நாட்டுக் கொடிகளுடன் வீட்டுக்கு வெளியே வந்த மக்கள் தலைநகர் அல்ஜியர்ஸின் மத்தியில் கூடியிருந்தனர்.
இதேவேளை, அல்ஜீரியாவின் ஜனாதிபதியாக தனது பதவிக்காலத்தின் முடிவை ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா அரசமைப்புச் சபைக்கு உத்தியோகபூர்வமாக ஆலோசனை கூறியதாக அல்ஜீரிய அரச தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
இதுதவிர, அல்ஜீரிய ஜனாதிபதியாக தனது பதவிக்காலத்தை இன்று செவ்வாய்க்கிழமை முடிவுக்கு கொண்டுவருவதான தனது முடிவை உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகாவின் இராஜினாமா கடிதத்தில் தெர்விக்கப்பட்டுள்ளதாக அல்ஜீரிய்ட அரச ஊடகம் ஏ.பி.எஸ் கூறியிருந்தது.
இந்நிலையில், அரசமைப்புச் சபையின் தலைவர் தயேப் பெலைஸிடம் தனது இராஜினாமாக் கடிதத்தை அப்துல்அஸீஸ் புதுபீகா, தனது சக்கரக் கதிரையிலிருந்து கையளிக்கும் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.
2013ஆம் ஆண்டு பக்கவாதமொன்றுக்கு உள்ளான பின்னர் அரிதாகவே பொதுவெளியில் தென்பட்டிருந்த ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா, ஐந்தாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த பின்னர் பதவி விலகுமாறு பாரிய அழுத்தத்தை ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா கொண்டிருந்தார்.
ஐந்தாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் ஜனாதிபதி அப்துல்அஸீஸ் புதுபீகா தெரிவித்திருந்ததுடன், இம்மாத இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவடைய முன்னர் இராஜினாமா செய்வார் என அவரது அலுவலகம் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.
அல்ஜீரிய அரசமைப்புப்படி, ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்த பின்னர் நாடாளுமன்றத்தின் மேற்சபையின் சபாநாயகர் 90 நாட்கள் வரையில் தற்காலிக ஜனாதிபதியாக செயற்படலாம் என்ற நிலையில், அதற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
19 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
1 hours ago