2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் பெண்களைப்  பாலியல் பலாத்காரம் செய்ய, ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு‘வயாகரா‘ கொடுக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப்  போர் தொடுத்து வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இப் போர் தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது” படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது.

இப் போரில் பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்களும் சிறுவர்களும் கூட  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கபட்ட பெண்கள் சாட்சியமளித்துள்ளனர். இதுவும் ஒரு இராணுவ உத்தியாகவுள்ளது.

மேலும் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வயது 4 முதல் 82 வயது வரை இருக்கும்” என்றார்.

இந்நிலையில் இக் குற்றச் சாட்டுக்களை மறுத்துள்ள ரஷ்யா, பொதுமக்களால் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் மட்டுமே தாம்கவனம் செலுத்தி வருவதாகத்  தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X