Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 07 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டன் தியேட்டர் கொமாண்டின் இராணுவத் தலைமையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்றுவதன் மூலம், தீவு தேசத்தில் மக்கள் விடுதலை இராணுவத்தின் புதுப்பிக்கப்பட்ட கவனம் பற்றி ஜனாதிபதி ஷி ஜின்பிங், தாய்வானுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளார்.
புதிய இராணுவத் தலைமை தாய்வான் பற்றிய தெளிவான கவனக் குவியத்தை பற்றி கொண்டுள்ளது.
ஈஸ்டன் தியேட்டர் கொமாண்டின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஹீ வெய்டாங், சீன இராணுவ ஆணைக்குழுவின் புதிய இரண்டாம் நிலை துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு வயதான ஜெனரலும் இராணுவ மூலோபாயவாதியுமான ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஆணைக்குழுவின் முதல் தரவரிசை துணைத் தலைவராகத் திரும்பியுள்ளார்.
இருவருக்கும் சீனாவின் கிழக்கு இராணுவ மாவட்டங்களில் கட்டளை வளம் உள்ளது என்று ஊடக ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஜெனரல் ஹீ வெய்டாங், ஜியாங்சு மாகாணத்துக்கு அதன் இராணுவத் தளபதியாக மாறுவதற்கு முன்னர், புஜியானில் உள்ள 31ஆவது குழு இராணுவ தளத்தில் தனது ஆரம்ப ஆண்டுகளைக் கழித்திருந்தார் என்பதுடன், இது நாட்டின் ஈஸ்டன் தியேட்டரை மேற்பார்வையிடும் நான்ஜிங் இராணுவ பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 இல் லெப்டினன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், முழு ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதுடன், ஈஸ்டன் தியேட்டரின் கட்டளையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய குழு உறுப்பினர்கள் 68 வயதை அடைவதற்குள் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதப்படாத கட்சி விதிமுறைகளுக்கு எதிராக நடந்த ஜெனரல் ஜாங் யூக்ஸியாவின் பதவி உயர்வு ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஷீயின் இராணுவ மூலோபாயவாதிகளில் ஒரு முக்கிய உறுப்பினரான ஜெனரல் ஜாங், 2012க்கும் 2017 க்கும் இடையில், ஷீயின் முதல் பதவிக் காலத்துடன் இணைந்து, இராணுவத்தின் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு திட்டங்களை மேற்பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஒரு வருடத்தில் தாய்வானுக்கு எதிராக வளர்ந்து வரும் சீன சொல்லாட்சிக்கு (பேச்சுச் சாதுரியம்) ஏற்ப இந்த மறுசீரமைப்பு உள்ளது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தாய்வானுக்கு அருகே டசின் கணக்கான விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பியுள்ள பீஜிங், தீவின் மீது ஒரு ஏவுகணையை வீசியது. எனினும், தொடர்ந்து சொல்லாட்சியை தாய்வான் எதிர்க்கிறது.
தாய்வான் ஜலசந்தி முழுவதும் அமைதியைப் பேணுவதற்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளில் சீனாவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், சுய ஆட்சி தீவின் இறையாண்மையில் சமரசத்துக்கு இடமில்லை என்றும் வலியுறுத்துகிறார்.
இரு தரப்பின் சொல்லாட்சிகள் மற்றும் பீஜிங்கின் சமீபத்திய சூழ்ச்சிகள், தாய்வானை சீன இராணுவம் கையகப்படுத்தும் முயற்சியானது அடுத்ததாக இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டிவிட்டதாக மேற்குலகம் உணர்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago