Editorial / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாகக் கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் தங்களது அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சீர்லுகா உள்ளிட்டவர்கள், நேற்று (24) இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதன்போது, இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக, ஒரு ஆங்கில நாளிதழிலில் செய்தி வெளியானது என்றும் அந்தத் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பின்னணியில், இலங்கை தௌஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்த்தும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் இந்தச் செய்தியை, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத், வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர், குண்டு வெடிப்புச் சம்பவத்தில், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் பெயரைச் சேர்த்ததற்கு, அந்த ஆங்கில நாளிதழ் மறுப்பு செய்தி வெளியிட்டிருந்தது என்றும் குண்டு வெடிப்புச் சம்பவத்தை, எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாட்டில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமைப்பாகவும் மக்கள் நல சேவையில் ஈடுபடும் அமைப்பாகவும், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இருந்து வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல, தங்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்தும் அமைப்பாகவே, இலங்கை தௌஹீத் ஜமாஅத் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு, இது இலங்கை அரசாங்கத்துக்குத் தெரியும் என்றும் என்றும் கூறியுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago