Ilango Bharathy / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏமனில் புனித ரமழான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட பொருட்களைப் பெறச் சென்ற 85 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏமனில் உள்ள சானா நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இலவச உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
இதனையடுத்து குறித்த இடத்தை நோக்கி மக்கள் படையெடுத்ததால் அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இக்கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago