Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இளம்பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் திடீரென பெண்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே வந்து, தனது ஆடைகளைக் களைந்து அந்தரங்க உறுப்புகளைக் காட்டி வக்கிரமாகச் செயல்பட்டுள்ளார். சில நொடிகள் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த நபர், பின்னர் எவ்வித சலனமுமின்றி தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து காபி குடித்தது அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது.
விசாரணையில், அவர் கோட்டா பெர்மாய் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்என்பதும், அவருக்கு ஒரு செயற்கைக் கால் இருப்பதும் தெரியவந்தது. அவரது உடல்நிலையைக் கருதி அங்கிருந்தவர்கள் அவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரிடம் அந்த நபர் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தற்போது வரை காவல்துறை தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.இருப்பினும், பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளது.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago