2025 மே 14, புதன்கிழமை

இஸ்ரேலுக்கு ஹமாஸ் நிபந்தனை

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கிலும், ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் நோக்கிலும் இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் பலத்த உயிர் சேதம் ​ஏற்ப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு  இஸ்ரேலுக்கு நிபந்தனை விதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X