Editorial / 2019 மே 06 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலை நோக்கி, 250க்கும் மேற்பட்ட றொக்கெட்டுகளை பலஸ்தீனத்தின் காஸாவிலுள்ள ஆயுததாரிகள் ஏவியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், காஸா மீது வான் தாக்குதல்களும், தாங்கித் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது வீட்டை றொக்கெட் தாக்கியதைத் தொடர்ந்து குண்டுச் சிதறல்களால் காயமடைந்த இஸ்ரேலியர் ஒருவர், காஸவுக்கு வடக்காக 10 கிலோ மீற்றரிலுள்ள அஷ்கெலோனில் நேற்று அதிகாலை கொல்லப்பட்டுள்ள நிலையில், தாயொருவரும், அவரது பெண் குழுந்தையொன்றும் உள்ளடங்கலாக நான்கு பலஸ்தீனர்கள், இஸ்ரேலியத் தாக்குதலால் கொல்லப்பட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், தனது இலக்கைத் தாக்கியிருக்காத பலஸ்தீன றொக்கெட்டொன்றாலேயே தாயும், குழந்தையும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளில் ஆரம்பித்த றொக்கெட் தாக்குதல்களால், காஸாவுடனுள்ள இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளிலுள்ள வீடுகள் இலக்காகியுள்ளதுடன், அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் புகலிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கிர்யாட் கட்டில் குண்டுச் சிதறல்களால் 80 வயதான பெண்ணொருவர் மோசமாகக் காயமடைந்துள்ள நிலையில், தமது அயர்ண் டோம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பானது டசின் கணக்கான றொக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் இணங்கப்பட்ட யுத்தநிறுத்தமொன்றைத் தொடர்ந்து கடந்த வாரயிறுதிலேயே மோதல் வெடித்திருந்தது.
தாக்குதலொன்றில், இஸ்ரேலியப் படைவீரர்கள் இரண்டு பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுததாரிகள் இருவர் உட்பட நான்கு பலஸ்தீனர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, துருக்கிய செய்தி முகவரமான அனடொலுவின் அலுவலகங்களை வான் தாக்குதலொன்று தாக்கிய நிலையில், தனது கண்டனத்தை துருக்கி வெளியிட்டிருந்தது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago