Editorial / 2019 ஏப்ரல் 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல், காஸாவுக்கிடையேயுள்ள எல்லையுடனான பாரியதொரு பலஸ்தீன ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதான பேரணிக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற மோதல்களில் 17 வயதான மூவர் கொல்லப்பட்டிருந்ததாக காஸா நகரத்திலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தநிலையில், காஸாவைச் சேர்ந்த 316 பேர் காயமடைந்திருந்தனர்.
இஸ்ரேலில் இம்மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், இஸ்ரேல், காஸா எல்லையில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் ஓராண்டு நினைவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், எல்லையில் ஆயிரக்கணக்கான படைகளை இஸ்ரேல் தரையிறக்கியிருந்தது.
இஸ்ரேலிய முன்னரங்குடனான ஐந்து ஆர்ப்பாட்டப் புள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், பெரும்பாலோனோர் எல்லை வேலியிலிருந்து தள்ளியே நின்றிருந்தனர்.
இந்நிலையில், காஸா நகரின் கிழக்கில், இளைஞர்களைக் கொண்ட சில குழுக்கள் எல்லை வேலியை அணுகியதுடன், பல தடவைகள் அதைத் தகர்க்க எதிர்பார்த்தபோதும் இஸ்ரேலிய கண்ணீர்ப்புகை பிரயோகத்தாலும், துப்பாக்கிச் சூட்டாலும் எல்லை வேலியை விட்டுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தின் சில மணித்தியாலங்களைத் தொடர்ந்து இஸ்ரேலை நோக்கி காஸாவாவிலிருந்து ஐந்து றொக்கெட்டுகள் ஏவப்பட்டிருந்த நிலையில், நேற்று (31) அதிகாலையில் ஹமாஸின் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேலிய தாங்கிகள் தாக்குதல் நடத்தியிருந்தன.
எவ்வாறெனினும், இஸ்ரேலிய இராணுவத்தினதும், காஸாவில் சம்பவத்தைக் கண்ணுற்றோரின் தகவல்படி, றொக்கெட் தாக்குதல்களும், இஸ்ரேலின் பதிலடியும் எந்தவித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
மத்திய காஸாவிலுள்ள, காஸா நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள ஹமாஸின் நிலைகள் மீது இஸ்ரேலியத் தாங்கிகள் தாக்குதல் நடத்தியிருந்ததாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்திருந்தனர்.
20 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago