Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார் என ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.
மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் தற்போது தனது வான்வெளி எல்லையை மூடியுள்ளது.
மேலும், "டஜன் கணக்கான இலக்குகள்" தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. R
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago