Freelancer / 2026 மார்ச் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, நேற்று (08) இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள்களில் ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் குட்ஸ் படையின் லெபனான் பிரிவு தளபதிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியதில் குவைத்தில் இரண்டு எல்லை காவல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை (0 7), தெஹ்ரான் நகரத்திலும் அதற்கு அருகிலும் உள்ள எண்ணெய் கிடங்குகளில் அமெரிக்க-இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்கியது. எண்ணெய் கிடங்கு தாக்குதல்களுக்குப் பிறகு தெஹ்ரானில் எரிபொருள் விநியோகம் 'தற்காலிகமாக' நிறுத்தப்பட்டுள்ளது என்று தெஹ்ரானின் ஆளுநர் முகமது சதேக் மோட்டமெடியன் கூறினார்.
அதேபோல, ஈரானின் மத்திய யாஸ்த் மாகாணத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல்களில் பாதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. (a)

22 minute ago
38 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
50 minute ago
53 minute ago