2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈராக்கிலிருந்து வெளியேறும் ஐ. அமெரிக்க படைகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இவ்வாண்டு இறுதியுடன் தமது சண்டை நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்கப் படைகள் நிறுத்திக் கொள்ளும் எனத் தெரிவித்த ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆனால் ஈராக்கிய இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் எனக் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஈராக்கியப் பிரதமர் முஸ்தஃபா அல்-கட்ஹிமியுடன் பேச்சுக்களை ஜனாதிபதி பைடன் நடாத்திய பின்னரே குறித்த அறிவிப்பு வெளிவந்திருந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் எச்சங்களை எதிர்கொள்வதற்கு உள்ளூர்ப் படைகளுக்கு உதவுவதற்காக தற்போது 2,500 ஐ. அமெரிக்க படைகள் ஈராக்கில் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஈராக்கில் இதே எண்ணிக்கையான ஐ. அமெரிக்கப் படைகளே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும், இந்நகர்வானது பிரதமர் அல்-கட்ஹிமிக்கு சாதகமாக அமைவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசெய்னை அகற்றுவதற்காகவும், இல்லாத பாரிய ஆயுதங்களை அகற்றுவதற்காகவும், கடந்த 2003ஆம் ஆண்டு ஈராக்குக்குள் ஐ. அமெரிக்கா தலைமையிலான படைகள் நுழைந்திருந்தன. கடந்த 2011ஆம் ஆண்டு ஐ. அமெரிக்க சண்டைப் படைகள் வெளியேறியபோதும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியபோது, ஈராக்கிய அரசாங்கத்தின் கோரிக்கையில் திரும்பியிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .