2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஈராக்கில் இரு தரப்புகள் பெரும்பான்மை என உரிமை கோருகின்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் இவ்வாண்டு மே மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை, தொடர்ந்தும் நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தேர்தலைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை, தாமே பெற்றுக்கொண்டுள்ளதாக, ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு குழுக்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்தே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மதகுருவும் கடந்த தேர்தலில் தனித்த கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவருமான மொக்டடா அல்-சாடரும், தற்போதைய பிரதமர் ஹைடர் அல்-அபாடியும் இணைந்து, கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்குமெனவும், அவர்களிருவரும் நேற்று முன்தினம் (02) அறிவித்தனர்.

ஆனால் மறுபக்கமாக, ஆயுதப் பிரிவைச் சேர்ந்த ஹாடி அல்-அமெரி, முன்னாள் பிரதமர் நூரி அல்-மலிகி இருவரும், இவ்வறிவிப்புக்குப் பதில் வழங்கும் வகையில், இன்னோர் அறிவிப்பை வெளியிட்டனர். தாங்களிருவரும் கூட்டணியொன்றை அமைத்துள்ளதாகவும், மற்றைய கூட்டணியிலிருந்து சிலர் பிரிந்து வந்துள்ள நிலையில், தமக்கே பெரும்பான்மை உள்ளதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான், ஈராக்கில் இழுபறி நிலை தொடரவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X