Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் அரசியல் உயர் மட்டத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களில், நேற்று முன்தினம் ஈரானியத் தூதரகம் தீ வைக்கப்பட்டதுடன் எண்ணெய் வயல் பணியாளர்களை பணயக்கைதிகளாக குறிப்பிட்ட நேரம் வைத்திருந்த நிலையில், பஸ்ரா விமான நிலையமானது றொக்கெட்டுகளால் நேற்று தாக்கப்பட்டுள்ளது.
அரசியல் மோசடிக்கெதிராக கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால், ஈராக்கின் இரண்டாவது நகரான பஸ்ராவில் ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அரசாங்கக் கட்டடங்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் கொழுத்தப்பட்ட்டும் இருந்தன.
மோசமான அரசாங்க சேவைகள் தொடர்பாக இவ்வாண்டு ஜூலையிலேயே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தபோதும் கடந்த வாரமே அவை தீவிரமடைந்திருந்தன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களை நேற்று நிறுத்துவதாக அதை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தபோதும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோருள்ள பஸ்ராவில் பாதுகாப்புப் படைகளின் கடுமையான பிரசன்னம் தற்போதும் காணப்படுவதோடு, இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த ஊரடங்கு, வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டதன் பிற்பாடு நீக்கப்பட்டிருந்தது.
இச்சந்தர்ப்பத்திலேயே, பஸ்ரா விமான நிலைய வளாகத்தை, அடையாளந் தெரியாத தாக்குதலாளிகளால் ஏவப்பட்ட கட்யூஷா றொக்கெட்டுகள் மூன்று தாக்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தபோதும் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவலில்லை. விமான நிலையத்துடனேயே ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது;
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இறந்ததுடன், 48 பேர் காயமடைந்திருந்தனர். இது தவிர, பாதுகாப்புப் படையின் இரண்டு அங்கத்தவர்களும் காயமடைந்திருந்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago