Freelancer / 2022 ஜூலை 30 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் புகைப்படத்தில் தோன்றிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பிரபல மாதாந்த இதழான 'வோக்' இதழுக்கு உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகும் 'வோக்' இதழில் இந்த நேர்காணல் இடம் பெறுகிறது.
இதுதொடர்பில் 'வோக்' இதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், ஒலனா போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிற்கும் படங்களும், ஜெலன்ஸ்கியும், ஒலனாவும் ஜோடியாக இருக்கும் படங்களும் உள்ளன.
போர் இடம்பெறும் நேரத்தில் இப்படி புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவது அவசியமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. (a)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025