Freelancer / 2022 மார்ச் 06 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய சபை தலைவர் சார்லஸ் மைக்கலிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சபைத் தலைவரை தொலைபேசி மூலம் அழைத்தே இந்த உரையாடல் இடம்பெற்றதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கான புதுடெல்லியின் வேண்டுகோளை உரையாடலின் போது, பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
இதன்போது, கார்கிவ் நகரில் இந்திய மாணவர் உயிரிழந்தமைக்கு சபைத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்துகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
கீவ் மற்றும் மொஸ்கோ தூதுக்குழுக்களுக்கு இடையே சமீபத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் இந்தியப் பிரதமர் வரவேற்றுள்ளார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago