2025 மே 14, புதன்கிழமை

’’உங்களில் யார் மிக மிக சோம்பேறி?’’

Freelancer   / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மாண்டெனெக்ரோ இது சின்ன கிராமங்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டது. இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே 6 இலட்சம் தான்.

இந்த நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் யார் சோம்பேறி என்ற பட்டத்திற்காக வித்தியாசமான ஒரு போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கேற்போர் 24 மணிநேரமும் கட்டல்களில் படுத்தபடியே இருக்க வேண்டும். அவர்கள் எழுந்து அமரவே அல்லது நடக்கவோ அனுமதி இல்லை. ஒருவர் எத்தனை நாட்கள் அப்படியே படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே போட்டியின் மையக்கரு. அதேநேரம் ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை 10 நிமிடங்கள் கழிப்பறைக்குச் செல்ல மட்டும் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதிக நேரம் படுத்துக் கொண்டே இருப்பவர் தான் போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார். மேலும் இந்தப் போட்டியில் வெல்வோருக்கு  1,070 டொலர்கள் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் படுத்துத் தூங்க அனுமதி உண்டு. படுத்துக் கொண்டே உணவு மற்றும் பானங்களை அருந்தலாம் மேலும், அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதி உண்டு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .