2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உடற்பயிற்சி செய்தால் அது இலவசம்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ருமேனியாவில் குறிப்பிட்ட உடற்பயிற்சியைச்  செய்து முடிப்போருக்கு இலவசமாக  பஸ் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான இணையத்தில் வெளியான வீடியோவொன்றும் தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த வீடியோவில் ”ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்வதையும், இவ்  உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன்  குறித்த இயந்திரம்  இலவச  பஸ் டிக்கெட் ஒன்றை வழங்குவதையும் காணலாம்.

இந்நிலையில் பொது மக்களை ஆரோக்கியத்துடன் வைப்பதற்காகவே  ருமேனியாவில் இம்முறை பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .