Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை எனக் கூறிக் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணொருவர் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரானில் உணவகமொன்றில் ஹிஜாப் அணியாமல் உணவருந்திய இரு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக ஈரானில் இப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலம் வாய்ந்த பலரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கவிஞர் மோனா போர்ஜோயி, ஈரான் கால்பந்து வீரர் உசைன் மகினி, முன்னாள் ஈரான் ஜனாதிபதி அலி அக்பரின் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago