2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உண்ணவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



சுவிட்சர்லாந்தின்  பேடன் (Baden ) நகரில் கசனோவா  ( Casanova ) என்ற பிரபல  இந்திய உணவகமொன்று இயங்கி வருகின்றது.

 குறித்த உணவகமானது அண்மையில் தமது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறையொன்றை விதித்துள்ளது.  

அதாவது இவ் உணவகத்துக்கு வருவோர், தங்கள் தட்டில் எடுக்கும் உணவு முழுவதையும் உண்டு முடிக்கவிலை என்றால் அவர்களுக்கு 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என  அவ் உணவகம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பானது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, குறித்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களில் 90 % பேர் இந்த விதிமுறைக்கு  ஆதரவு தெரிவித்து வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் என்னவென்றால், பஃபே வகை உணவு, அதாவது நாமே தட்டை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் வசதி கொண்ட உணவு முறையில் தான் இந்த உணவகம் செயற்பட்டு வருகிறது.
எனவே மக்கள்  ஆசையில் தங்கள் தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள்.

பின்னர் அவற்றை முழுமையாக சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. இதனால் மீதமான உணவு குப்பைத் தொட்டியைச் சென்றடைகிறது.
 இவ்வாறு உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் என்னும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவ்  உணவக உரிமையாளரான சுல்மான் கௌரி(Sulman Ghauri), இதுவரை யாரையும் அபராதம் செலுத்துமாறு வற்புறுத்தியதில்லை எனவும் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .