J.A. George / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் நாட்டை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இத்தாலிய கடற்கரையில் தனது நண்பருடன் நீந்தி குளிக்க சென்றுள்ளார்.
எனினும், இதில் அவர் காணாமல் போயுள்ளார். 16 மணிநேரத்திற்கு பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கடலில் நீந்த சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
இதன்பின் உடலில், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில், 28 முறை அவரது உடலில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
உயிரிழப்பதற்கு முன் அவர், முழு அளவில் அறிகுறியற்றவராகவே இருந்துள்ளார் என இறப்பு பதிவு அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த அளவில் வைரசானது பாதித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு, இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆய்வாளர்கள், உயிரிழந்த 50 வயது நபருக்கு 27 நாட்களாக நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது.
48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago