Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா என்ற உறங்கிக் கொண்டிருந்த யானை எழுந்து விட்டதென இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது நடப்பு பிரதமர் பதவிக்காலத்தின் இறுதி சுதந்திர தினமான இன்று, இந்தியத் தலைநகர் புது டெல்லியின் செங்கோட்டையிலிருந்து உரையாற்றும்போதே குறித்த கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
அடுத்தாண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிலையில், 80 நிமிடங்களுக்கு மேலாக நேற்றைய 72ஆவது சுதந்திர தினத்தில் உரையாற்றியிருந்த பிரதமர் மோடி, தனது அரசாங்கத்தின் அடைவுகளைப் புகழந்ததோடு, பாரிய சுகாதாரக் காப்புத் திட்டமொன்று அடுத்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கபடுமெனவும் இந்தியா ஆளுள்ள விண்கலத்தை 2022ஆம் ஆண்டு அனுப்புமென்றும் அறிவித்தார்.
இது தவிர, சாதனை ரீதியிலான பொருளாதார வளர்ச்சியை தாங்கள் அடையவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், மோடி பதவியேற்ற பின்னர் இந்தியாவின் பொருளாதாரமானது ஆண்டுதோறும் ஏழு சதவீதம் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு ஆரம்பத்தில் தேர்தலை பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவர் அறிவித்துள்ள சுகாதாரக் காப்புத் திட்டத்தின் மூலம் 500 மில்லியன் இந்தியர்கள் ஏறத்தாழ 7,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சுகாதாரக் காப்பை ஆண்டுதோறும் பெறவுள்ளனர். குறித்த திட்டமானது “மோடிகெயார்” என அழைக்கப்படுகின்ற நிலையில், உலகின் மிகப்பெரிய அரசாங்க சுகாதார காப்பு முன்னெடுப்பென வர்ணிக்கப்படுகின்றது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago