2025 மே 09, வெள்ளிக்கிழமை

உலகளவில் 80 கோடி பேருக்கு சிறுநீரக கோளாறு

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில மருத்துவக் கல்லூரியில் உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது கல்லூரியின் சிறுநீரகவியல் பிரிவு தலைவர் டாக்டர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கூறுகையில், ‘உலகளவில் 80 கோடி பேர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு இலட்சம் பேரில் 80 பேருக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது.

“சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைகிறது. முன்கூட்டியே கண்காணித்து சிகிச்சை பெற்றால் அதில் இருந்து மீள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X