Mithuna / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமேசான் மலைக்காடுகள் உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் ஆகும். இங்கு விஞ்ஞானிகள் நடத்தி வரும் ஆய்வில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அமேசான் காட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளில் ஒருவரான ப்ரீக் வோங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.

அதனுடன், “நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது. நான் இதற்கு முன்பு ஒரு பெரிய இனத்தை கண்டுபிடித்தேன். அது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு” என தெரிவித்துள்ளார்.
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
25 minute ago
2 hours ago