2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மோசமான கழிவறையைத் தேடிச் செல்லும் நபர்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் கிரஹாம் அஸ்கி. 58 வயதான இவர் உலகின் மோசமான கழிவறையைக் கண்டுபிடிப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளார்.

 
இதன் காரணமாக இலங்கை  மதிப்பில் சுமார் 4.46 கோடி ரூபா செலவு செய்து 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நீண்ட நாள் தேடுதலுக்குப் பின்னர்  தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில் அவ்வாறான கழிவறையை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில்”அந்த கழிவறையை ‘நரகத் துளை’ என குறிப்பிடுவது தான் சரியாக இருக்கும். அதை வார்த்தைகளில் சொன்னால் நீங்கள் படிக்கும்போது வாந்தி எடுப்பது நிச்சயம்” எனக் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X