Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2024 மே 07 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரமான பூனை ஒன்று உலாவிக் கொண்டிருந்த காட்சி இணையத்தில் பரவி பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஓமன் நாட்டின் புஜைரா நகரிலேயே இவ்வாறு உலாவிக்கொண்டிருக்கின்றது.
ஐக்கிய அரபு நாடான ஓமன் நாட்டின் நகரான புஜைராவில் மக்களை பீதியடைய வைத்து இருக்கிறது ஒரு பூனை. மிகவும் பயங்கரமான முக அமைப்பை கொண்ட இந்த பூனையால் அந்த ஊர் மக்கள் பீதியடைந்து இருக்கிறார்கள்.
ஓமன் நாட்டின் முக்கிய நகரம் புஜைரா. இங்கு அந்நாட்டு மக்கள் மட்டுமன்றி வேறு நாட்டு மக்களும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் குடியிருப்பு பகுதிக்குள் ஒரு வினோதமான பூனை உலாவிவந்தது அவ்விடத்தில் இருந்த சிசிரிவியில் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோ பார்க்கவே அத்தனை பயங்கரமாக இருந்துள்ளது. மேலும், இந்த பூனையின் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிக பயனரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அந்த வகையில், அந்நாட்டின் சுற்றுசூழல் அதிகாரிகள் இந்த பூனை குறித்த விசாரணையை மேற்கொள்வதாக உறுதியளித்தது. முன்னதாக, இந்த பூனையை புலி என மக்கள் நினைத்து இருக்கிறார்கள். ஆனால், இது பூனைதான் என்றும் புலி என போலி தகவலை மறுத்திருந்தது புஜைரா சுற்றுசூழம் ஆணையம்.
அந்த வகையில், புஜைராவின் சுற்றுசூழல் ஆணையம் இந்த பூனை இப்போது அதே குடியிருப்பு பகுதியில் இருக்கிறதா என்பதனை விசாரித்து வருகிறது. மேலும், சிசிரிவி காட்சியில் பதிவான பூனையின் காட்சிகளை போட்டோக்களாக எடுத்து மக்களிடம் காட்டி எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிவருகிறார்கள்.
புஜைரா நகரின் சுற்றுசூழல் அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த பயங்கரமான பூனை அல் வாஷிக் என அந்நாட்டில் அழைக்கப்படும் எனவும் இதனை ஆங்கிலத்தில் Caracal என அழைப்பார்கள் எனவும் கூறியிருக்கிறார்கள். இந்த பயங்கரமான பூனையானது அதன் இரையை பிடிக்க 10 அடி வரை பாயும் ஆற்றல் கொண்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த பயங்கரமான பூனையால் மனித உயிருக்கே பாதிப்பு இருக்கிறது என கூறபட்டுள்ளது. மேலும், இந்த பூனையால் அப்பகுதியில் இருக்கும் மற்ற உயிரணங்களுக்கு பெரிதான அபாயம் இருக்கும் எனவும் கூறபட்டு இருக்கிறது. தற்போது, இந்த பூனையை எங்கு இருக்கிறது என்கிற சோதனை பணியை மேற்கொண்டு வருகிறது அந்நாட்டு சுற்றுசூழல் ஆணையம்.
மேலும், இந்த பூனையை குடியிருப்பாளர்கள் வளர்த்தது தெரியவந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறபட்டு இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
59 minute ago
2 hours ago