Freelancer / 2023 மார்ச் 29 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னால் 24 மணிநேரத்திற்குள் உக்ரேன் - ரஷ்யா யுத்தத்தை நிறுத்த முடியும் என ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் - ரஷ்யா போரை பேச்சுவார்த்தை மூலம் 24 மணிநேரத்திற்குள் முடிவுக்கக் கொண்டு வர முடியும் என ட்ரம்ப் தெரிவித்தாலும் அது எப்படி என்பதைத் தெரிவிக்கவில்லை.
2024 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த இரு நாடுகளுக்குமிடையேயான போர் முடிவுக்கு வரவில்லை என்றால், தேர்தலில் அதிபராக என்னைத் தேர்வு செய்தால், 24 மணிநேரத்திற்குள் இந்தப் போரை முடிவுக்கக் கொண்டு வருவது எனக்கு மிக இலகுவான காரியம் என ட்ரம்ப் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். அது தொடர்பான விடயங்களை இரகசியமாக வைத்திருக்கிறேன். அதைப் பகிரங்கப் படுத்தினால் என்னால் அதைப் பயன்படுத்த முடியாமல் போகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026