2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

எல்லையில் அமெரிக்க ஆயுதங்களை குவித்துள்ள இந்தியா

Freelancer   / 2021 ஒக்டோபர் 30 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அதிநவீன இராணுவ தளபாடங்களை இந்தியா - சீனா இடையேயான எல்லையில் குவித்துள்ளது இந்திய இராணுவம்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் வகை ஹெலிகாப்டர்கள், அதிநவீன எடை குறைந்த பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்களை அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா குவித்திருக்கிறது. 

இதன் மூலம் இந்தியாவின் தாக்குதல் திறன் சீனாவுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

சீனா கடந்த வாரம் உயர்ரக ஆயுதங்களை எல்லையில் குவித்த நிலையில் அதற்கு ஒரு படி மேலாக இந்தியா இப்போது அமெரிக்க தயாரிப்பு அதிநவீன போர்க்கருவிகளை எல்லையில் இறக்கியிருக்கிறது. 

சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தவறான யூகங்களை கொண்டிருப்பதாக இந்தியா பற்றி சீனா விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .