Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெக்ஸிக்கோ உடனான தமது தெற்கு எல்லையை மூடும் அச்சுறுத்தலை, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று முன்தினம் இரட்டிப்பாக்கியிருந்தது.
ஐக்கிய அமெரிக்காவுக்கு வேண்டுமென்றே அகதிகளை அனுப்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டிய மத்திய அமெரிக்க நாடுகளான எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டூரஸ் ஆகியவற்றுக்கான உதவியை நிறுத்துவதாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தெரிவித்த மறுதினமே மெக்ஸிக்கோவுடனான தமது எல்லையை மூடும் அச்சுறுத்தலை ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் இரட்டிப்பாக்கியுள்ளது.
மெக்ஸிக்கோவூடாக பயணிக்கும் மத்திய அமெரிக்க அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அங்கிகரிக்கப்படாத அகதிகள் ஐக்கிய அமெரிக்காவை அடைவதை மெக்ஸிக்கோ தடுக்காவிட்டால் இவ்வாரம் எல்லையை மூடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எல்லையை மூடுவதால் மில்லியன் கணக்கான சட்டரீதியான கடைக்கைகளும், வர்த்தகத்தில் பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பாதிப்பும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்திலேயே, மேலதிக எல்லைப் பாதுகாப்பு அல்லது அகதிச் சட்டத்தை மாற்றுவதற்கான சட்டமூல நடவடிக்கைக்காக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து எந்த ஆதரவையும் பெறாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வேறு சில தெரிவுகளே இருப்பதாக வெள்ளை மாளிகையின் பணியாட் தொகுதியின் தலைவர் மிக் முல்வனே, ஏ.பி.சி தொலைக்காட்சியின் திஸ் வீக் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்லையில் நிலைமை உருகும் புள்ளியில் இருப்பதாகவும், ஜனாதிபதி ட்ரம்ப், தனது எச்சரிக்கையில் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்யானி கொன்வே, ஃபொக்ஸ் நியூஸ் சண்டே நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இந்நிலையில், டெக்ஸாஸிலுள்ள எல் பஸோ எல்லையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேரணியொன்றில், ஜனாதிபதி ட்ரம்பின் அகதிக் கொள்கைகளை, ஜனநாயகக் கட்சி சார்பில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள பெட்டோ ஓ ருர்கே நிராகரித்துள்ளார்.
20 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago