Editorial / 2019 மே 07 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள ஷெரிமட்டா விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் ஒன்றை நேற்று முன்தினம் மேற்கொள்கையில் ரஷ்ய ஏரோஃபுளொட் பயணிகள் விமானமொன்று தீப்பிடித்ததில், விமானத்திலிருந்த குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சூகோய் சுப்பர்ஜெட்-100 ரக விமானமானத்தின் பின்பகுதியின் பெரும்பாலானது, விமானமானது ஓடுபாதையுடன் மோதித் தரையிறங்கியபோது தீப்பிடித்ததை தொலைக்காட்சி காணொளி வெளிப்படுத்தியிருந்தது.
அந்தவகையில், எரிந்து கொண்டிருந்த விமானத்தின் முன்பகுதியிலிருந்து வழுக்கிச் செல்லக்கூடிய பகுதியொன்றினூடாக, விமான ஓடுபாதை, புற்றரையூடாக பயணிகள் எழும்பி வருவது குறித்த காணாளியில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், ரஷ்ய விசாரணையாளர்களை மேற்கோள்காட்டிய இன்டர்ஃபக்ஸ் செய்தி முகவரகம், கொல்லப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு சிறுவர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 11 பேர் காயமடைந்துள்ளதாக மொஸ்கோ பிராந்தியத்துக்கான சுகாதார அமைச்சர் டிமித்ரி மட்வெயவ் தெரிவித்துள்ளனர். மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் ஆபத்தான நிலையொன்றில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிடப்படாத தொழில்நுட்பக் காரணங்களுக்காக குறித்த விமானமானது திரும்பியதாகவும், கடின தரையிறக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அதனால் தீப்பிடித்தாகவும் அறிக்கையொன்றில் ஷெரிமட்டா விமான நிலையம் தெரிவித்துள்ளது.
திரும்புவதற்கு முன்னர் வட ரஷ்ய நகரமான முர்மன்ஸ்கக்கு மொஸ்கோவிலிருந்து பயணித்த விமானமானது 73 பயணிகளையும், ஐந்து விமானச் சிப்பந்திகளையும் கொண்டிருந்ததாக செய்தி முகவரகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மொஸ்கோவுக்கு மேலால் தனது எரிபொருள் தாங்கிகளை வெறுமையாக்குவது மிகவும் ஆபத்தானது என்ற நிலையில், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்பை இழந்த நிலையில், எரிபொருள் தாங்கிகள் முழுமையாக இருந்தபடி விமானம் தரையிறங்கியதாக அடையாளங் காணப்படதாக தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டி இன்டர்ஃப்க்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிளைட்றாடர் 24 கண்காணிப்பு சேவையின்படி, அவசரத் தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கு முன்னர் விமானமானது மொஸ்கோவை சுற்றி இரண்டு தடவை வட்டமடித்துள்ளதுடன், புறப்பட்டு 45 நிமிடங்களுக்குப் பின்னர் தரையிறங்கியுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago