Editorial / 2018 ஜூன் 26 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பில், தற்போதைய ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் வெற்றிபெற்றுள்ளார் என, அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒன்றரை தசாப்தங்களாக ஆட்சிபுரிந்து வரும் ஏர்டோவானுக்கு, அண்மைக்காலத்தில் கிடைத்த மிகப்பெரிய சவாலாக இத்தேர்தல் கருதப்பட்டாலும், அவர் வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் சபையின் தவிசாளர் சாடி குவென், 97 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன எனவும், ஜனாதிபதி ஏர்டோவானுக்கு, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைப்பது உறுதி எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் தமது வேட்பாளருக்குத் தோல்வி என்பதை, எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆரம்பத்தில், ஜனாதிபதி ஏர்டோவானுக்கு முதற்சுற்றிலேயே வெற்றி கிடைக்காது எனத் தெரிவித்து வந்த எதிர்க்கட்சிகள், பின்னர் அக்கருத்தை, “என்ன முடிவு கிடைத்தாலும், ஜனநாயகப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டன.
இந்நிலையில், வெற்றி தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர், அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3 மணிக்கு, தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ஏர்டோவான், “நாளையிலிருந்து ஆரம்பித்து, எமது மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப் பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.
அதேபோல், “பயங்கரவாத” அமைப்புகளுக்கு எதிராக, தமது நாட்டு அதிகாரிகள், இன்னமும் அதிகமான பணியை ஆற்றுவர் எனவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஏர்டோவான், துருக்கியின் நவீன வரலாற்றில், மிகவும் பிரபலமான அரசியல் தலைவராகக் காணப்படுகிறார். ஆனால், மக்களின் கருத்துகளைத் துருவப்படுத்தும் ஒருவராகவும் காணப்படுகிறார்.
குறிப்பாக, சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு, ஜனாதிபதி ஏர்டோவான் மீது முன்வைக்கப்படுகிறது. அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியைத் தோற்கடித்த அவர், அதன் பின்னர், இராணுவத்தினர், சிவில் அதிகாரிகள் என, தனக்கு விரோதமான கருத்துகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கானோரை, சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago