Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 30 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னர் திப்பு சுல்தான் போர்களில் பயன்படுத்திய வாள் 140 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்டவர் மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார்.
இவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அதோடு மராட்டியர்களோடும் பல போர்களைப் புரிந்துள்ளார். இந்தப் போர்களில் எல்லாம் இவருக்கும் பெரும் வெற்றியை தேடித்தந்த வாளே தற்போது 140 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் பிளேடு வகையைச் சேர்ந்த குறித்த வாள் திப்புசுல்தானின் மறைவிற்கு பின்னர் பிரித்தானியாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டேவிட் பேர்ட் என்பவருக்கு அவரது வீரத்தை பாராட்டி பரிசாக வழங்கப்பட்டது.
அந்த வாளை லண்டனைச் சேர்ந்த போன்ஹாம்ஸ் என்ற ஏல நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று ஏலம் விட்டது.
ஏலத்தில் தொலைபேசி வாயிலாக கலந்து கொண்ட நபரொருவரே அந்த வாளை 140 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஏலம் எடுத்தவர் யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த ஏல நிறுவனம் தாங்கள் நிர்ணயித்ததை விட ஏழு மடங்கு அதிக தொகைக்கு இந்த வாள் ஏலம் போய் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago