2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஐ. இராச்சிய நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தாக்குதலெனச் சந்தேகிக்கப்படும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்துக்கு வெளியேயுள்ள தடுப்புகளில் காரொன்று இன்று மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனது இருபது வயதுகளையுடைய ஓட்டுநரை தாம் கைதுசெய்துள்ளதாகவும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தில் அவரைத் தடுத்து வைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலையில் குறித்த சம்பவத்தை பயங்கரவாத சம்பவமொன்றாக தாங்கள் இதை நோக்குவதாகத் தெரிவித்த ஸ்கொட்லான்ட் யார்ட், காயமடைந்தவர்கள் எவருக்கும் உயிராபத்தான காயங்களெதுவுமில்லையென நம்பப்படுவதாகக் கூறியுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையான சைக்கிளில் செல்பவர்கள், பாதசாரிகளை மோதிய பின்னரே குறித்த காரானாது நாடாளுமன்றத்துக்கு வெளியேயுள்ள தடுப்புகளில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.06 மணியளவில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் மோதியதையடுத்து ஓட்டுநரைக் கைது செய்வதற்கு சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதந்தரித்த அதிகாரிகள் அவரை துப்பாக்கி முனையில் காரிலிருந்து அகற்றியிருந்ததுடன், காரிலிருந்து வேறு எவருமிருக்கவில்லையென்பதுடன் ஆயுதங்களெவையும் மீட்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X