2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

“ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் சுரங்கப்பாதைகள்”

Mithuna   / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் உள்ளதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் இராணுவம்.“இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் அமைப்பினர்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான மின்சார விநியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்பின்னணியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கிறது.

ஆனால், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் அமைப்பின​ர் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் தற்போது வரை முன்வைக்கப்படவில்லை.

இந்த சுரங்கபாதை அரை கிலோ மீட்டர் தூர நீளத்துக்கு உள்ளது என்றும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் இருந்து உள்ளன என இதனை பார்வையிட்ட பத்திரிகையாளர்களிடம் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .