2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஒடிஷா நிலச்சுரங்க நிலச்சரிவு: நான்கு பேர் இறந்ததாக அச்சம்

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கிழக்கு மாநிலமொன்றான ஒடிஷாவிலுள்ள கோல் இந்தியா லிமிட்டட் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவொன்றில் நான்கு பணியாளர்கள் இறந்ததாக அஞ்சப்படுவதாகவும், ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் கோல் இந்தியா லிமிட்டட்டின் துணை நிறுவனமான மஹாநதி கோல்ட்ஃபீல்ட்ஸ் லிமிட்டட்டின் பேச்சாளர் டிக்கென் மெஹ்ரா இன்று (24) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளொன்றுக்கு 20,000 நிலக்கரியை தயாரிக்கும் குறித்த நிலக்கரிச் சுரங்கமானது நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற குறித்த நிலச்சரிவையடுத்து மூடப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கைகளைத் தொடங்க குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என டிக்கென் மெஹ்ரா மேலும் கூறியுள்ளார்.

இந்திய அரசால் இயக்கப்படும் கோல் இந்தியா, சிங்ரெனி கொலியரிஸ் கோ லிமிட்டட்டால் இயக்கப்படும் நிலக்கரிச் சுரங்கங்களில் கடந்தாண்டு சராசரிய ஏழு நாட்களுக்கு ஒரு பணியாளர் இறந்துள்ளதாக இந்திய அரசாங்கத் தரவு வெளிப்படுத்துகின்ற நிலையில், நிலக்கரிச் சுரங்கப் பணியாளரொருவருக்கான மிகவும் ஆபத்தான நாடொன்றாக இந்தியா காணப்படுகிறது.

இந்தியாவின் பல சட்டரீதியற்ற நிலக்கரிச் சுரங்கங்களும் மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகளையே கொண்டிருக்கும்போதும் அது தொடர்பில் தரவுகள் குறைவாக உள்ளன. பல விபத்துகள் தெரிவிக்கப்படுவதில்லை.

கடந்தாண்டு டிசெம்பரில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மெகாலாயாவில் குறைந்தது 15 நிலக்கரிச்சுரங்கப் பணியாளர்கள், சட்டரீதியற்ற நிலக்கரிச்சுரங்கத்தில் சிக்கியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X