2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஒரு வாக்கால் நாடாளுமன்ற ஆதரவைப் பெற்றது

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஒப்பந்தமில்லாமல் வெளியேறும் சந்தர்ப்பத்தைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நடைமுறையின் நீடிப்பொன்றை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயைக் கோர வைக்கும் சட்டமூலமானது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கால் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

தொழிலாளர் கட்சியின் இவாட் கூப்பரால் கொண்டு வரப்பட்ட குறித்த சட்டமூலமானது சட்டமாவதற்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேற்சபையின் அனுமதியைப் பெற வேண்டும். எவ்வாறெனினும், பிரெக்சிற் நடைமுறைகளில் நீடிப்பொன்றை வழங்குவதா என ஐரோப்பிய ஒன்றியமே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமூலமானது, 313-312 என்ற வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்தவகையில், குறித்த சட்டமூலத்தின் மூலம் பிரெக்சிற் நடைமுறைக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமையைத் தாண்டி நீடிப்பொன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரேசா மேயைக் கோர வைப்பதுடன், இந்த நீடிப்பின் காலத்தைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்குகின்றது.

பிரெக்சிற் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் தெரேசா மேயுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜெர்மி கோர்பினுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளநிலையிலேயே மேற்குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பிரதமர் தெரேசா மே, ஜெர்மி கோர்பினுக்கிடையிலான நேற்று முன்தின பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என வர்ணிக்கப்பட்டிருந்தபோதும், பிரதமர் தெரேசா மேயின் கன்சவேர்ட்டிவ், ஜெர்மி கோர்பினின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீண்ட காலத் தாமதமொன்றை பிரெக்சிற்றில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் பிலிப் ஹமன்ட், எந்தவொரு பிரெக்சிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது எனக் கூறியுள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X