2025 மே 12, திங்கட்கிழமை

ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்

Mayu   / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ரொக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X