2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 10 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில்  கொரோனாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது.

குறிப்பாக அந்நாட்டில் ஒமைக்ரோனின் `BF.7` துணை வைரஸ்களின் பரவலானது நாளுக்கு நாள் வெகுவான அதிகரித்து வருவதால் அங்கு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அதேசமயம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும்  பல மடங்கு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் விஞ்ஞானிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக டிசம்பர் 15-ஆம் திகதி முதல் ஜனவரி 4-ஆம் திகதிக்குள் இந்த மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .