2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஒற்றை காலில் 10 செக்கன்கள் நிற்க முடியவில்லையென்றால் ஆபத்து

Ilango Bharathy   / 2022 ஜூன் 29 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒற்றைக்காலில் 10 செக்கன்கள் கூட நிற்க முடியவில்லை என்றால் 10 வருடங்களில் உயிர் இழக்கக் கூடிய அபாயம் உள்ளது என புதிய ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.
 
பிரித்தானியா, அமெரிக்கா, பிரேசில், அவுஸ்திரேலியா மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று இறப்பு மற்றும் சமநிலை போன்றவற்றிற்கு இடையே தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். 
கடந்த 2008ஆம் வருடம் தொடங்கப்பட்ட இவ் ஆய்வினை ரியோ டி ஜெனிரோ சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமை தாங்கினார். இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1202 பேர் கலந்து கொண்டுள்ளனர் எனவும் 2020 ஆம் வருடம் வரை 12 வருடங்கள் வரை இவ் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் நடந்து அதன் முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் குறித்து ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு காலில் ஆதரவின்றி 10 செக்கன்கள் நிற்க முடியவில்லை என்றால் பத்து வருடங்களுக்குள் அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து 85 சதவீதம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .