Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மையின் (சி.ஐ.ஏ) பணிப்பாளரும் பகிர்ந்துகொண்டுள்ளதாக, துருக்கி அரசாங்கத்துக்குச் சார்பான பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சி.ஐ.ஏ-இன் பணிப்பாளர் கினா ஹஸ்பெல், துருக்கிக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பாக, துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இதன் ஓர் அங்கமாகவே, இந்த ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.
ஜமால் கொல்லப்பட்டமை தொடர்பான காணொளி, ஒலிப்பதிவு ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக, துருக்கி தெரிவித்து வருகிறது. அந்த ஆதாரங்களை, ஏனைய நாடுகளுடன் பகிர வேண்டுமென, தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே, இது தொடர்பான ஒலிப்பதிவை, ஹஸ்பெல் செவிமடுத்தார் என்று, துருக்கித் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் உண்மையாக இருந்தால், ஜமாலின் கொலை தொடர்பான ஆதாரங்களை, முதன்முதலாக வெளிநபர்களுக்குத் துருக்கி வழங்கிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமையும்.
இதேவேளை, ஊடகவியலாளர் ஜமாலின் கொலை தொடர்பான தேடுதல்கள், துருக்கியில் இன்னமும் தொடர்ந்து வருகின்றன. இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்தில் வைத்தே, அவர் கொல்லப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இஸ்தான்புல்லின் சுல்தான்காஸி மாவட்டத்திலுள்ள, நிலத்துக்குக் கீழான கார்த் தரிப்பிடமொன்றில், தேடுதல் நடத்தப்பட்டது. துணைத் தூதரகத்துக்குச் சொந்தமான காரொன்றே, இதன்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என, துருக்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
31 minute ago