2026 மே 14, வியாழக்கிழமை

ஒலிம்பிக் தொடரை சீர்குலைக்க அமெரிக்கா திட்டம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 30 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீர்குழைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எதிர் வரும் 4ஆம் திகதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்குழைக்கும் திட்டத்தில் அமெரிக்கா முழுவீச்சில் செயல்படுவதாகவும், குறிப்பாக பல்வேறு போட்டியாளர்களுக்கு பணம் வழங்கி தொடருக்கு எதிரான செயல்களில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாகவும், சீனா குற்றம்சாட்டி உள்ளது.

எனினும் சீனாவின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

உய்குர் இன மக்கள் துன்புறுத்தப்படுவதாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரை ராஜாங்க ரீதியில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .