Freelancer / 2024 மே 10 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் கக்குவான் இருமலுக்கு 5 சிறுவர்கள் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
“100 நாள் இருமல்” என கூறப்படும் இந்த கக்குவான் இருமல் தொற்று காரணமாக ஏற்றபட்ட இந்த உயிரிழப்புகள், ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவை என ருமு UK Health Security Agency தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அங்கு, இந்வருடம் மொத்தமாக 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான் இருமல் கிருமி வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, மார்ச் மாத இறுதி வரை 2,793 வழக்குகள் பதிவாகியுள்ளதாக UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ள அதேசமயம், இது கடந்த வருடம் பதிவான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கக்குவான் இருமல் கிருமி தொற்றானது, அனைத்து வயதினரையும் பாதிக்கும் அதேவேளை, சிறு குழந்தைகளுக்கு இதன் தாக்கம் அதிகம் என UKHSA ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 1,319 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரியில் 556 தொற்றாளர்களும், பெப்ரவரியில் 918 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.S
8 minute ago
27 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
54 minute ago