2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 32 பேர்

R.Tharaniya   / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்க நாடான கொங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது பீதியடைந்த சுரங்க தொழிலாளர்கள் ஓடியபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் இறப்பு எண்னிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

32 பேர் இறந்ததாக கூறப்பட்டாலும் உண்மையான இறப்பு எண்னிக்கை 40-யை தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோபால்ட் கனிமத்தை சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் காங்கோ உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த கனிம உற்பத்தியில் 80 சதவீதத்தை சீன நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X