Freelancer / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹைதியில் டேங்கர் லொரியில் கசிந்த எரிபொருளை பிடிக்க சென்ற போது அது திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மிராகோனே என்ற நகரில் நடந்த இச்சம்பவத்தில் 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த உடன் பிரதமர் கேரி கோனில், அங்கு சென்று பார்வையிட்டார். பிறகு அவர், இச்சம்பவம் மிக கோரமானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்வோம் எனக் கூறியுள்ளார்.
அந்த டேங்கர், காலை 7 மணியளவில் டயர் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்த எரிபொருள் கசிந்த போது, திடீரென வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது போன்று அங்கு விபத்துகள் அங்கு அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.S
9 hours ago
9 hours ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
10 Nov 2025