2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கச்சாவை நிறுத்துவோம் -எச்சரிக்கும் ரஷ்யா

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி7 நாடுகள் நிர்ணயித்த விலை ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரேன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனையடுத்து  உக்ரேன் மீதான போருக்கு ரஷ்யா செலவிடும் தொகையைக்  கட்டுப்படுத்தவும், அதன் வருவாயைக்  குறைக்கவும் ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சமீபத்தில் கச்சா எண்ணெய் உச்சவரம்பு விலையை நிர்ணயித்து அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.  
 
இந்நிலையில், ஜி7 நாடுகள் நிர்ணயித்த உச்சவரம்பு விலை ரஷ்யாவால் ஏற்று கொள்ள கூடியதாக இல்லாத பட்சத்தில், சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோகம் அடியோடு நிறுத்தப்படும் எனவும், . அத்துடன் அமெரிக்காவின் உச்சவரம்பு விலைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கான விநியோகமும் நிறுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
 
இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X