2025 மே 03, சனிக்கிழமை

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது

Editorial   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.

அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X