2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘கடத்தப்பட்ட 130 நைஜீரிய மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவின் நைகர் மாநிலத்திலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றிலிருந்து நொவெம்பரில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுவர்களில் எஞ்சியிருந்த 130 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டின்புவின் பேச்சாளர் பயோ ஒனனுகா ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 300 மாணவர்களும் 12 பணியாளர்களும் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருந்த நிலையில் 50 சிறுவர்கள் அப்போதே தப்பித்திருந்தனர். பின்னர் டிசெம்பர் 8ஆம் திகதி 100 பேர் மீட்கப்பட்டிருந்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X